பேராசியர் Dr.அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று (19.8.2013) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்! அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கி வைப்பானாக!
இந்து வைதீக குடும்பத்தில் பிறந்து, பெரியாரின் நாத்திக கொள்கையால் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் என்று பெயர் மாற்றி நாத்திக கொள்கையை ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர். இறை தேடுதலால் முதலில் புத்த மதத்தில் இணைந்தார். பிறகு இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாம் கூறும் இறைக்கொள்கையே சரியென கண்டு 2010ம் ஆண்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். முஸ்லிமான நாளிலிருந்து அயராமல் மார்க்க அழைப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அண்மையில் நம் பள்ளி சார்பாக முஸ்லிமல்லாத சகோதர்களுக்கான சொற்பொழிவு நடத்த அவரை அழைப்பதற்காக அவர் செல்போனை தொடர்பு கொண்ட போது அவரது மகன் பேசினார். 'அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் சேர்த்துள்ளோம், உடல்நிலை சரியானதும் தொடர்பு கொள்ளுங்கள்' என்றார். அதற்குள் அல்லாஹ் அவரை அழைத்து கொண்டான்!
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
-அல்குர்ஆன் 2:156
நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்?
-Dr.அப்துல்லாஹ் சிறப்புரை
பார்க்க:
http://youtube.com/playlist?list=PLB5D4F0C1B06F41B1&desktop_uri=%2Fplaylist%3Flist%3DPLB5D4F0C1B06F41B1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக