செப்டம்பர் மாத முஸ்லிமல்லாதோருக்கான 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி, நமது தஃவா குழுவை சார்ந்த சகோதரர் சலீம் அவர்களின் திருமணம் நடைபெறும் மண்டத்திலேயே நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. திருமணத்திற்கு முஸ்லிமல்லாத சகோதரர்கள் அதிகமாக வருவார்கள் என்பதாலும் நிகழ்ச்சி நடைபெறும் கடைசி ஞாயிறான 28ம் தேதியிலேயே அவருக்கு திருமணம் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி திருமண மண்டபத்தின் நுழைவு பகுதிலேயே நமது தஃவா குழுவினர் முஸ்மல்லாதோரை கவரும் வண்ணம் புத்தகங்களையும் துண்டு பிரசுரங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற பேனரும் வைக்கப்பட்டது. குறிப்பாக முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு குர்ஆன் இலவசம் என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டது.
நாம் எதிர்பார்த்தது போலவே முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலரும் குர்ஆன் வாங்குவதற்கும் இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் ஆர்வத்தோடு வந்தார்கள். சிலர் குடும்பத்தோடு அமர்ந்து கேட்டார்கள். மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை அழகிய முறையில் விளக்கி கூறினார். அவர்களுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ் இந்த திருமண மண்டப தஃவா சிறந்த அனுபவத்தையும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக! ஆமீன்!!
புதன், 1 அக்டோபர், 2014
இஸ்லாம் ஓர் அறிமுகம் - 6
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக