அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (28-3-2015) நமது பள்ளியில் இருவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.
1. திருவேற்காடு பகுதியை சார்ந்த சங்கர் என்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க சகோதரர் இஸ்லாத்தை ஏற்று கலிமா மொழிந்தார். அவருக்கு முஹம்மது சர்தார் என்று பெயர் வைக்கப்பட்டது. “எனது வாழ்வில் குறைந்தது பத்து பேர்களையாவது இஸ்லாத்திற்கு அழைத்து வருவேன்” என்று உணர்ச்சி பொங்க கூறிய அவரின் வார்த்தைகளை அல்லாஹ் உண்மையாக்கி வைப்பானாக!
2. நமது பகுதியை சார்ந்த சகோதரி ஒருவரும் இஸ்லாத்தை ஏற்று கொள்வதாக கூறியதையடுத்து அவரை இன்று பெண்கள் பள்ளிக்கு வரவழைத்து அவருக்கும் கலிமா சொல்லி தரப்பட்டது. மதரஸா சென்று பயிற்சி பெற விருப்பமுள்ளதாக தெரிவித்தார். இன்ஷா அல்லாஹ் அதற்கான ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்படும்.
இஸ்லாத்தை ஏற்று கொண்ட இந்த இருவரும் மார்க்கத்தில் இறுதி வரை உறுதியாக இருக்கவும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஹிதாயத் கிடைக்கவும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக