வியாழன், 23 ஜூலை, 2015

ஓரிறைக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட சகோதரர்!

அல்ஹம்துலில்லாஹ்.!
அல்லாஹ்வின் பேரருளால் நமது பள்ளியில் நேற்று (23-7-15) இஷா தொழுகைக்கு பிறகு ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டுள்ளார். அவருக்கு மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார்.

இஸ்லாம் எப்படி ஈர்த்தது என்று அவரிடம் கேட்டபோது,
"சிறு வயதிலிருந்தே சிலை வழிபாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரே இறைவன்தான் இருக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். இந்நிலையில் என் இஸ்லாமிய நண்பர்கள் மூலம் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கை பற்றி தெரிந்து கொண்டு ஈர்க்கப்பட்டேன். தொடர்ந்து இந்த ரமலானில் என் இஸ்லாமிய நண்பர்களோடு 15 நாட்கள் நோன்பும் வைத்தேன். மேற்கொண்டு இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவதற்காக நண்பர் இங்கு (பள்ளிக்கு) அழைத்து வந்தார். இங்கே சொல்லப்பட்ட விளக்கங்கள் எனக்கு பிடித்தது. சத்தியத்தை தெரிந்த பிறகு கலிமா சொல்வதன் அவசியத்தை சகோதரர்கள் சொல்லியதும் முழு மனதுடன் சம்மதித்து கலிமா கூறினேன்." என்று கூறினார்.

சகோதரர் இஸ்லாத்தில் இறுதி வரை உறுதியாக நிலைத்திருக்க துஆ செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக