அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பள்ளிவாசலில் 25-10-15 அன்று மாலை இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்ச்சியில் மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகியவற்றை விளக்கினார். பிறகு மவ்லவி தர்வேஸ் ஹஸனி அவர்கள் இஸ்லாம் போதிக்கும் அழகிய வாழ்வியல் நெறிகளை விளக்கினார். தொடர்ந்து சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் தரப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அந்த சகோதரர் இறுதி வரை ஈமானில் உறுதியுடன் நிலைத்திருக்க துஆ செய்வோம்.
இந்த நிகழ்ச்சிக்காக உடலாலும் பொருளாலும் அனைத்து வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக