செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழை வெள்ளம் - நிவாரண பணியில் நமது பள்ளி

சென்னையை புரட்டிய மழை வெள்ளம் பூந்தமல்லி பகுதியையும் விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்ட பூந்தமல்லி கண்டோன்மென்ட் பகுதி ஒரு வாரமாகியும் வெள்ளத்தில் மிதக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் நமது பெரிய பள்ளி  மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிவாசல் தஃவா குழு சார்பாக தொடர்ந்து ஏழு நாட்களாக அனைத்து சமூக மக்களுக்கும் உணவு தயாரித்து விநியோகித்து வருகிறோம்.

பல்வேறு பகுதியிலிருந்து வரும் நிவாரண பொருட்களையும் உரியவர்களுக்கு சென்று சேர்த்து வருகிறோம். கண்டோண்மென்ட் பகுதி மட்டுமல்லாமல் அருகிலுள்ள மாங்காடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், அனகாபுத்தூர், பட்டாபிராம் போன்ற பகுதிகளுக்கும் நமது சகோதரர்கள் சென்று உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்து வருகிறார்கள்.

பாதிப்புகள் நமக்கு ஒரு பக்கம் வருத்தமளித்தாலும் செயல்வழி தஃவா களமாக சென்னை மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. அல்ஹம்துலில்லாஹ்!

வீரியமாக செயல்பட்டு வரும் நமது தஃவா குழுவின் பணிகள் தொடர்ந்து நடைபெற துஆ செய்யுங்கள் சகோதரர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக