ஞாயிறு, 27 மார்ச், 2016

சிறப்பாக நடபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம்

அன்பான சகோதரர்களே,

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையினால் நேற்றைய தினம் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் மவ்லவி பஷீர் ஃபிர்தவ்ஸி அவர்கள் அறிமுக உரையாற்றி சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளித்தார்.
கலந்து கொண்ட சகோதரர்கள் அனைவரும், இது நல்ல நிகழ்ச்சி, இதன்மூலம் நாங்கள் இஸ்லாத்தை பற்றி  பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டோம் என்றும் தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஹிதாயத் தருவானாக!

இந்நிகழ்ச்சிக்காக தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி பிறமத சகோதரர்களை தேடித்தேடி சென்று அழைப்பு விடுத்து அழைத்து வந்த சகோதரர்களுக்கும் நிகழ்ச்சிக்காக தங்கள் உடலாலும் பொருளாலும் துஆக்களாலும் ஒத்துழைத்து உதவிய அனைத்து சகோதர சகோதரியருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் சிறந்த நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!

நம் முயற்சியையும் உழைப்பையும் இன்னும் வீரியமாக்கி உளத்தூய்மையுடன் பணிகளை தொடர்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக