செவ்வாய், 28 மார்ச், 2017

இஸ்லாம் ஓர் அறிமுகம் 26-03-2017

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால்  26-3-17 அன்று நமது பள்ளியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இதில் மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்வு குறித்து அழகிய முறையில் விளக்கினார்கள்.

பிறகு சகோதரர் அப்துர்ரஹீம் அவர்கள், சங்கர் நாராயணனாக இருந்த தான் இஸ்லாத்தை ஏற்றது எப்படி எனபதை விளக்கினார்.

கேள்வி - பதில் நேரத்தில் இஸ்லாம் பற்றி பல சதேகங்களை சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.

லுஹர் தொழுகையில் சில சகோதரர்கள் நம்முடன் சேர்ந்து தொழுதார்கள். உணவு இடைவெளிக்கு பிறகும் பல சகோதரர்கள் இஸ்லாம் பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர்களுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி உட்பட திரளான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் தருவானாக! ஆமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக