வியாழன், 11 மே, 2017

கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி முகாம் 2017

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பள்ளிவாசலில் கடந்த மே 1 முதல் பத்து நாட்களாக நடந்து வந்த கோடை கால இஸ்லாமிய வகுப்புகள் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 240 பிள்ளைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஆண்கள் பகுதியில் மூன்று  லெவல், பெண்கள் பகுதியில் மூன்று லெவல் என பிரித்து வகுப்புகள் நடத்தப்பட்டது.
அனைத்து நாட்களிலும் குழந்தைகளுக்கு தினமும் குளிர்பானம், மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.
இறுதி நாளான நேற்று அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள் வழங்கப்பட்டு இமாம் அவர்களின் அழகிய உபதேசத்துடன் நிறைவடைந்தது.
இந்த கோடை கால வகுப்புகள் சிறப்பாக நடந்து முடிப்பதற்கு உடலாலும், பொருளாலும், துஆ மூலமும் ஒத்துழைப்பு கொடுத்த நம்முடைய ஜமாத்தார்கள் அனைவருக்கும் நன்றி ஜஸாக்குமுல்லாஹு கைரன்.

உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே என்ற  நபிமொழியின் அடிப்படையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள், ஆலிமாக்கள், ஆலிமாக்களுக்கு உறுதுணையாக பெண் வாலண்டியர்ஸ், உலக நோக்கத்திற்காக இல்லாமல் அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டும் இந்த வகுப்புகளில் ஜூஸ் ,ஸ்நாக்ஸ், மற்றும் இறுதி நாளான நேற்று பரிசு, சான்றிதழ் மற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றில் பங்கெடுத்து உதவிய அனைவருடைய செயல்களைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. வல்ல ரஹ்மான் நம் பாவங்களை பிழை பொறுப்பனாக..

கடைசி நாளான நேற்று இரண்டு லெவல் மாணவர்களுக்கு exam வைக்கப்பட்டது. அதற்கான பரிசுகள் வரும் நாட்களில் வழங்கப்படும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக