திங்கள், 24 ஜூன், 2013

பராஅத் ஒரு பித்அத்


  ஷஃபான் மாதம் பிறை 15 அன்று முஸ்லிம்களில் பலர் அது சிறப்புக்குரிய நாளாகக் கருதி இரவில் சிறப்பு தொழுகை மற்றும் பல்வேறு அனாச்சாரமான செயல்களி ஈடுபட்டு வருகின்றர். பராஅத் ஒரு பித்அத் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நமது பெரியபள்ளி அஹ்லே ஹதீஸ் சார்பாக இமாம் கௌஸ் உமரி அவர்கள் தலைமையில் தஃவா குழுவினர் 23.5.2013 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று அஸரிலிருந்து மக்ரிபு வரை மெகாபோன் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

  ஒரு பக்கம் நாம் பராஅத்துக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, வழியில் சில வடமாநிலத்து இளைஞர்கள், பராஅத் இரவில் எப்படி தஸ்பீஹ் தொழ வேண்டும் என்ற உருது நோட்டிஸை விநியோகித்து கொண்டிருந்தனர். அவர்களை நம் தஃவா குழுவினர் இடைமறித்து சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு இமாம் கௌஸ் உமரி அவர்கள், பராஅத் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத் என்பதை பக்குவமாக உருது மொழியில் பேசி விளக்கம் கொடுத்தார். அவர்களும் பொறுமையாக நின்று கேட்டு சென்றனர். அல்லாஹ் அவர்களுக்கு தெளிவைக் கொடுத்து நேர்வழியை லேசாக்குவானாக!
சின்ன மசூதி தெரு


இந்திரா நகரில்
பராஅத் ஆதரவாளர்களுக்கு இமாம் கௌஸ் உமரி விளக்கம் கொடுக்கிறார்

1 கருத்து: