செவ்வாய், 16 ஜூலை, 2013

ரமலானை வரவேற்போம்!

ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் நமது பெரிய பள்ளிவாசல் அஹ்லே ஹதீஸ் சார்பாக பஜார் தெரு மைதானத்தில் கடந்த 5.7.2013 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நமது தஃவா குழுவினரின் அயராத முயற்சிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றியாக சுமார் 600க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அதிகமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்!

மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தொடங்கிய நிகழ்ச்சிக்கு நம் பள்ளி இமாம் மௌலவி கௌஸ்கான் உமரி அவர்கள் தலைமை வகிக்க சகோ. தமீம் அன்ஸாரியின் இனிமையான கிராஅத்தோடு தொடங்கியது. சிறப்புரையின் முதலாவதாக மௌலவி ஹஸன் அலி உமரி அவர்கள் ரமலானின் சிறப்புகளையும் நோன்பின் சட்டங்களையும் அனைவருக்கும் புரியும் விதமாக விளக்கினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மௌலவி இக்பால் ஃபிர்தவ்சி அவர்கள் சமூகத்தில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளை புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டு இஸ்லாம் அதற்கு சொல்லும் தீர்வையும் விளக்கினார். இறையச்சத்தையூட்டிய அவரது கம்பீரமான பேச்சு அனைவரையும் அசைய விடாமல் கட்டிப்போட்டது அல்ஹம்துலில்லாஹ்!

நிறைவாக சகோ. முகம்மது மீரான் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றபோது மணி பத்து ஆனது. அவ்வளவு நேரமாகியும் வந்திருந்த மக்கள் யாரும் இடையில் எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக