| பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் |
"அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்." அல்குர்ஆன் 96:5-6 பெரியபள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் நடத்தும் கட்டுரைப் போட்டி ரமலானை முன்னிட்டு மார்க்க அறிவுத்திறனை ஊக்குவிக்கவும் எழுத்தாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் நமது பள்ளிவாசல் சார்பாக இஸ்லாமிய கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. கீழ்கண்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி நமது பள்ளிவாசல் இமாம் கௌஸ்கான் உமரி அவர்களிடம் நேரடியாகவோ அல்லது ghousekhanumari@yahoo.com என்ற முகவரிக்கு மெயில் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தலைப்புகள்: 1. அல்குர்ஆனும் அறிவியலும் 2. அண்ணல் நபி(ஸல்)- அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை 3. இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் உலக நடப்புகள் போட்டியின் விதிமுறைகள் |
- கட்டுரை A4 பேப்பரில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- கட்டுரையின் ஆதாரங்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
- கட்டுரை சுயமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். புத்தகங்களிலிருந்தோ இணையத்திலிருந்தோ முழுமையாக நகல் எடுக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்படும்.
- கட்டுரையின் முதற்பக்கத்தில் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.
- கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 1.8.2013
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் கட்டுரைகள் நமது பள்ளியின் இணையத்தளத்தில் (www.bigmosquemah.blogspot.com) வெளியிடப்படும். மேலும் சிறப்புப் பரிசுகளும் உண்டு. தேர்வு செய்யப்படும் அனைத்து கட்டுரைகளுக்கும் இன்ஷா அல்லாஹ் ஆறுதல் பரிசு நிச்சயம் உண்டு!
வெளியூர்காரர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக