எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். -புகாரி 6599
அன்பிற்குரியோரே, நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் மதம் மாற்றப்பட்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். அவர்களையெல்லாம் அவர்களின் இயற்கை மார்க்கமாகிய இஸ்லாத்திற்கு அழைப்பது நம் கடமை இல்லையா?
நம் கண் முன்னால் நரக நெருப்பை நோக்கி செல்லும் அவர்களுக்கு சுவர்க்கத்தின் பாதையை காட்டுவது நம் கடமை அல்லவா?
இஸ்லாத்தை எடுத்து சொல்வதால் அவர்களில் சிலர் இந்த உலகில் வேண்டுமானால் நம்மை வெறுக்கலாம். ஆனால் மறுமையில் அவர்களின் நிலைப்பாடு என்ன தெரியுமா?
"தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று காஃபிர்கள் (மறுமையில்) ஆசைப்படுவார்கள்." -அல்குர்ஆன் 15:2
எனவே மறுமையில் காஃபிர்கள் நம்மை குற்றம் சாட்டுவதற்கு வாய்ப்பளிக்காமல் இந்த உலகிலேயே நாம் அவர்களுக்கு மார்க்கத்தை எத்தி வைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக