திங்கள், 16 செப்டம்பர், 2013

சிறப்பாக நடைபெற்ற தஃவா பயிற்சி முகாம்!


  அல்ஹம்துலில்லாஹ்!
நமது பள்ளிவாசலில் தஃவா பயிற்சி முகாம் திட்டமிட்டவாறு 15.9.2013 ஞாயிறன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இஷா வரை சிறப்பாக நடைபெற்றது.

  
    இதில் மௌலவி அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள், முஸ்லிமல்லாதவர்களை எப்படி அணுக வேண்டும்? அவர்களிடம் அல்லாஹ்வையும் அவன் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் எப்படி அறிமுகப்படுத்த வேண்டும்? அவர்களிடம் என்னென்ன கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்? என்பன குறித்து அழகிய முறையில் அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்தார்.
சகோதரர்கள் திரளாக வந்திருந்து இறுதிவரை ஆர்வத்தோடு பயிற்சி பெற்றார்கள், மாஷா அல்லாஹ்! 
   
    தொடர்ந்து நடந்த ஆலோசனையில், இன்ஷா அல்லாஹ் மாதம் ஒருமுறை வெளியிடங்களுக்கு சென்று முஸ்லிமல்லாதவர்களுக்கு தஃவா செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அல்லாஹ் நம் அனைத்து காரியங்களையும் சீராக்கி செயல்படுத்த எளிதாக்குவானாக!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக