அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும்!
“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட
நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தனது பெற்றோர்,
பிள்ளைகள் மற்றும் முழு மனித
சமூகத்தையும் விட என்னை அதிகமாக
நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!”
ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக
உத்தம நபி(ஸல்)
அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும்.
நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர்
முஃமினாக முடியாது. பொதுவாக நாம் யார் மீது அதிக அன்பு வைப்போமோ அவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே கேட்போம். அவருக்கு பிடிக்காததை கண்டிப்பாக செய்ய மாட்டோம். ஆனால் நபி(ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதும் நபியவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் மவ்லிது எனப்படும் அரபி பாடல்களைப் பாடுவதும் நபி(ஸல்) அவர்கள் சொல்லித்தந்த, அனுமதித்த விஷயங்களா அல்லது அவர்கள் அறவே வெறுத்து தடுத்த விஷயங்களா என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் உண்டா?
நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் யாருக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை. நபி(ஸல்) அவர்களை தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்த நபித்தோழர்கள் யாரும் நபியவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியதாக வரலாறு கிடையாது. அதற்கு பிறகு வந்த நல்லோர்கள் நாற்பெரும் இமாம்கள் கொண்டாடியதில்லை. அப்படியென்றால் இந்த வழிகேடு எப்படி எப்போது புகுந்தது?
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில்
ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று." (நூல்: பிதாயாவன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதே வரலாறு.
மவ்லிது எனும் மாபெரும் பித்அத்
ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவன் எழுதிய உளறல்களை மவ்லிது என்ற பெயரில் சினிமா ராகத்தில் பக்தி பரவசதோடு பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டு பாடுவதுதான் நபியவர்கள் மீது நாம் வைத்துள்ள நேசமா? அரபி தெரிந்த எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் மவ்லிதை குப்பையில்தான் வீசுவான். அந்த அளவுக்கு மவ்லிதில் மார்க்கத்தை கேலிக்கூத்தாக்கும் கற்பனைகளும் நபியவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக வரம்பு மீறி புகழும் வார்த்தைகளும் நிறைந்து கிடக்கிறது. இது போன்ற வழிகேடுகளை நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள், "கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள் 3445
அல்லாஹ்வின் பெரும் அருளால் தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் மக்கள் விழிப்புணர்வு பெற்று மவ்லிதும் மீலாதும் மறைந்து வருகிறது. எனினும் சில பள்ளிவாசல்களில் ஒரு சிலரின் வறட்டு பிடிவாதத்தால் நடைபெறுகிறது. இதற்கு அவகள் சொல்லும் காரணம் காலம் காலமாக நம் முன்னோர்கள் செய்து வந்ததை நாம் விட முடியாது. இப்படி சொல்பவர்கள் அல்லாஹ்வின் இந்த கேள்விக்கு பதில் சொல்லட்டும்!
மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்"" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்"" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
குர்ஆன் 2:170
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக