வெள்ளி, 2 மே, 2014

HGWC மற்றும் பெரியப்பள்ளி தஃவா குழுவினர் இணைந்து நடத்திய அழைப்பு பணி

நமது பள்ளிவாசல் தஃவா குழுவினர் வாரந்தோறும் முஸ்லிமல்லாதோர்க்கு வெவ்வேறு பகுதிகளில் அழைப்பு பணி செய்து வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் விடுமுறை நாளான 1.5.2014 அன்று மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் (HGWC) தஃவா குழுவுடன் இணைந்து நமது பள்ளி தஃவா குழுவினர் பூந்தமல்லி, கரையான்சாவடி பகுதியில் தஃவா களப்பணியில் ஈடுபட்டனர்.

     ஆர்சிஎம் பள்ளி அருகில் நிழற்குடை அமைத்து, பொதுமக்கள் பார்வைக்காக குர்ஆன், புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைக்கப்பட்டன. முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலரும் ஆர்வத்தோடு பார்வையிட்டனர். அவர்களுக்கு நமது தஃவா குழுவினர் இஸ்லாத்தை பற்றிய விளக்கம் அளித்து புத்தகங்கள் வழங்கினர். நமது தஃவா பணியில் இது புதியதோர் அனுபவமாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக