ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இஸ்லாத்தை அறியாத அஸ்ஸாமிய முஸ்லிம்!

இன்றைய தெருமுனை தஃவாவில் அஸ்ஸாமை சேர்ந்த பெயரளவில் மட்டுமே முஸ்லிமாக இருந்த சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்யப்பட்டது. சிறு வயதிலிருந்தே முஸ்லிமல்லாதவர்களோடு பழகி எல்லா கடவுள்களையும் தான் வணங்கி வருவதாக கூறினார். அவர் கையில் இந்துக்கள் வணங்கும் சிவனை பச்சை குத்தியிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!

அல்லாஹ்வை பற்றியும் நபி(ஸல்) அவர்களை பற்றியும் எதுவுமே தெரியாத அவருக்கு ஏகத்துவத்தை பற்றியும் இஸ்லாத்தின் அடிப்படைகளை பற்றியும் சொல்லி கொடுக்கப்பட்டது. ஆர்வத்தோடு கேட்ட அவரை தொடர்ந்து நம் பள்ளிக்கு வரும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் கண்டிப்பா வருகிறேன் என்றார். அவர் உண்மையான முஸ்லிமாக வாழ துஆ செய்வோம்!

இந்த சகோதரரை போல இன்னும் எத்தனையோ பேர் நம்மை சுற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மார்க்கத்தை எத்தி வைப்பது நம் கடமை. ஈமான் கொள்வது, இபாதத் செய்வதோடு மட்டும் நாம் இருந்து விடாமல் தஃவா பணியிலும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே இந்நிலையை மாற்ற முடியும். நாளை அல்லாஹ்வின் விசாரணையில் பதில் சொல்ல முடியும். இன்ஷா அல்லாஹ் வாருங்கள் தஃவா பணியில் இணைவோம் சகோதரர்களே!!

103:1. காலத்தின் மீது சத்தியமாக.

103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக