அன்பிற்குரிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!
ஹதீஸ் மறுப்பில் நவீன முஃதஸிலாக்களாக உருவெடுத்து வரும் வழிகெட்ட TNTJ கழிசடைகள் நேற்று (15-3-15) நமது பகுதியில் மேடை போட்டு பேசிய கேவலமான கண்ணிமற்ற பேச்சுக்களால் நமது சகோதரர்கள் மற்றும் பொது மக்கள் கடும் கொந்தளிப்பிலும் ஆத்திரத்திலும் இருப்பதாக அறிகிறோம். இந்த கொந்தளிப்பு நியாமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் இதுநாள் வரை நம் பகுதியில் இதுபோன்ற கேவலமான ஆபாசமான பேச்சுகளை மார்க்கம் என்ற பெயரில் யாரும் அரங்கேற்றியதில்லை. பெண்கள், குழந்தைகள், மாற்று மதத்தவர்கள் என அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் அமைந்த இந்த பேச்சை கேட்கும் எவருக்கும் கோபம் வராமல் இருக்காது. இதன் மூலம் இந்த அசத்தியவாதிகள் தங்களை தாங்களே யார் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்கிறோம் என்று சொல்லும் இந்த பேர்வழிகளுக்கும் மார்க்கதிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
மேலும் நமது ஜமாஅத்தினரையும் பள்ளிவாசல் பற்றியும் பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசியிருப்பதாக நாம் அறிகிறோம். சகோதரர்களே இவர்களின் செயல்களுக்காக ஆத்திரப்படும் அதே வேளையில் இந்த ஆத்திரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் முயற்சி எடுக்க வேண்டுமே தவிர, அந்த கேடு கெட்டவர்களை போல கழிசடைத் தனமாக நாமும் நடந்து கொள்வதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
மார்க்க பணி என்று சொல்லி மக்களிடம் வசூல் செய்து பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து இது போன்ற கூட்டங்களை நடத்தி நம்மை எவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக அசிங்கப்படுத்த வேண்டுமோ அத்தனையும் அரங்கேற்றுவார்கள். எல்லாம் முடிந்த பிறகு நாளைக்கே போராட்டம் என்ற போர்வையில் பல்லிளித்து கொண்டு நம்மிடமே காசு கேட்டு கையேந்தி நிற்பார்கள். நம்மவர்களும் நம் சமுதாயத்திற்குத்தானே போராடுகிறார்கள் என்று நினைத்து கொண்டு வாரி வழங்கி விடுகிறார்கள். பிறகு அந்த பணத்தில் மேடை கட்டி நம்மையே காறி துப்புவார்கள்.
எனவே சகோதரர்களே, நம் பொருளாதாரம் இது போன்ற வீணான காரியங்களுக்கு பயன்பட வேண்டுமா? என்பதை சிந்தியுங்கள். பிற மக்களுக்கு இந்த விஷயத்தை எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அவர்களின் வழிகேடுகளை மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான வழியில் நம் கோபத்தை வெளிப்படுத்தி அவர்களின் அசத்தியத்தை முறியடிப்போம்.
நேர்வழியிலிருந்த நம் முன்னோர்கள், சத்தியத்திற்கு எதிராக இதை விட மோசமான எத்தனையோ கூட்டங்களையும் கொள்கை குழப்பங்களையும் சந்தித்து பல இன்னல்களையும் எதிர்கொண்டு தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து போராடித்தான் இந்த மார்க்கத்தை தூய்மையான முறையில் நம்மிடம் சேர்த்திருக்கிறார்கள்.
இன்ஷா அல்லாஹ் நாமும் பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் தொடர்ந்து அல்லாஹ்விடம் உதவி தேடுவோம், முயற்சி செய்வோம். அசத்தியம் ஒருபோதும் வெல்லாது.
“(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்."
(அல்குர்ஆன் 4:49)
(அல்குர்ஆன் 4:49)
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை."
(அல்குர்ஆன் 2:11-12)
(அல்குர்ஆன் 2:11-12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக