திங்கள், 9 மார்ச், 2015

அசத்தியவாதிகளின் பூச்சாண்டித்தனங்களை தாண்டி அரங்கேறிய சத்திய முழக்கம்!


அல்ஹம்துலில்லாஹ்.!
அல்லாஹுத் தஆலாவின் மாபெரும் கிருபையால் நேற்றைய தினம் (8-3-15) மவ்லவி அப்பாஸ் அலி அவர்களின் “நவீன கொள்கை குழப்பங்கள்" என்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி, ஹதீஸ் மறுப்பாளர்களின் பல்வேறு பூச்சாண்டிகளையும் தாண்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளாக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மவ்லவி அப்பாஸ் அலி அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும்  அசத்தியவாதிகளுக்கு பெரும் சாட்டையடியாக இருந்தது. சக முஸ்லிம்களை முஷ்ரிக் என்றும் காஃபிர் என்றும் சொல்லி நவீன கொள்கைகளை பரப்பி வரும் ஹதீஸ் மறுப்பு கூட்டத்தின் குழப்பங்களையும், குர்ஆனிலும்  ஹதீஸிலும் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளையும் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு எடுத்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பூவை, கண்டோன்மெண்ட் TNTJவினர் அவசர அவசரமாக மக்களை குழப்பும் நோக்கில் அவதூறான துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்கள். இதன்மூலம் இந்த பயானுக்கு கூடுதல் விளம்பரத்தை ஏற்படுத்தி நம் தஃவா குழுவினருக்கு வேலையை சுலபமாக்கி தர முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பயான் முடிவதற்க்குள்  அதற்கு பதிலளிக்கும் விதமாக நமது தஃவா குழு சார்பாக மறுப்பு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. (இரண்டு பிரசுரங்களும் இணைக்கப்பட்டுள்ளன)

இன்ஷா அல்லாஹ் இதன் வீடியோ பதிவு விரைவில் வெளியாக உள்ளது. துஆ செய்யுங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியில் செலுத்தி அதில் நிலைத்திருக்க செய்வானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக