புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நேற்று (5-4-15) “இஸ்லாம் ஓர் அறிமுகம்" நிகழ்ச்சி நமது பள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பயன்பெற்றனர். நமது இமாம் மவ்லவி கெளஸ்கான் உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளான ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை வாழ்க்கை ஆகியவற்றை விளக்கினார். மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் திருக்குர்ஆனின் அற்புதத்தை பற்றியும் சிறப்புகள் பற்றியும் விளக்கினார். தொடர்ந்து சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்கள். சகோதரர்களின் கேள்விகள்:
★ இஸ்லாம் மதமா? மார்க்கமா?
★ தீவிரவாதிகளில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பது ஏன்?
★ தாடி ஏன் வைக்கிறீர்கள்?
★ சுன்னத்(கத்னா) செய்வது ஏன்?
★ முஸ்லிம்கள் பல திருமணம் செய்து கொள்வது ஏன்?
★ தொழுகையின் நோக்கம் என்ன?
★ பள்ளிவாசலில் முஸ்லிமல்லாதவர்களை ஏன் அனுமதிப்பதில்லை?
★ உணவில் சிறந்தது சைவமா? அசைவமா?
போன்ற கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. கூடுதல் விளக்கத்திற்காக சிலருக்கு டிவிடிகள் வழங்கப்பட்டது.
தொழுகை நேரம் வந்ததும் விருப்பமுள்ளவர்கள் நம்மோடு தொழுது கொள்ளலாம் என்று சொன்னதும் பல சகோதரர்கள் நம்மோடு தொழுதனர். சிலர் நாம் தொழுவதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். பிறகு அவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பிறகும் பல சகோதரர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இறுதியாக குர்ஆன் கேட்டிருந்த சகோதரர்களுக்கு குர்ஆன் வழங்கப்பட்டு குர்ஆனை அணுக வேண்டிய முறைகளும் சொல்லி தரப்பட்டது.
நிகழ்ச்சி குறித்த கருத்து படிவத்தில் பலர், இந்நிகழ்ச்சி தங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாகவும் இஸ்லாம் பற்றிய பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் தங்கள் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நம் அழைப்பை ஏற்று வந்த அந்த சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை தருவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக