அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது தஃவா குழு சார்பாக முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு பல்வேறு வகையில் இஸ்லாம் எத்தி வைக்கப்படுகிறது. எங்கெல்லாம் முஸ்லிமல்லாத மக்கள் ஒன்று கூடுகிறார்களோ அங்கெல்லாம் நமது தஃவா குழுவினர் ஸ்டால் அமைத்து புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் குறுந்தகடுகள் வழங்கியும் வாய்மொழியாகவும் அவர்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லி வருகிறார்கள்.
இந்த வகையில் முஸ்லிம்களின் திருமண நிகழ்வுகளில் முஸ்லிமல்லாதர்கள் அதிகம் வருவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு நமது மஹல்லவாசிகளின் திருமணம் நடைபெறும் இடங்களில் அவர்களின் அனுமதியோடு ஸ்டால் அமைத்து தஃவா செய்து வருகிறோம்.
26-4-15 ஞாயிறு அன்று நமது தஃவா குழுவை சார்ந்த சகோதரர் தமீம் அவர்களின் சகோதரியின் திருமணம் ராயப்பேட்டையில் நடைபெற்றது. அங்கு நமது தஃவா குழு மூலம் ஸ்டால் அமைக்கப்பட்டது. முஸ்லிமல்லாத பல சகோதரர்கள் ஆர்வத்தோடு புத்தகங்கள் கேட்டு வாங்கி சென்றனர். வாய்மொழியாகவும் அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லப்பட்டது. பலர் குர்ஆன் படிக்க ஆர்வமுள்ளதாக தெரிவித்துள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் தருவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக