வியாழன், 9 ஜூலை, 2015

ரமலான் கட்டுரை போட்டி 2015

பெரியபள்ளி மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் நடத்தும்
கட்டுரைப் போட்டி

ரமலானை முன்னிட்டு மார்க்க அறிவுத்திறனை ஊக்குவிக்கவும் எழுத்தாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் நமது பள்ளிவாசல் சார்பாக இஸ்லாமிய கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. கீழ்கண்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி நமது பள்ளிவாசல் இமாம் கௌஸ்கான் உமரி அவர்களிடம் நேரடியாகவோ அல்லது ghousekhanumari@yahoo.com என்ற முகவரிக்கு மெயில் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

தலைப்புகள்:
1. இஸ்லாத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு
2. சமூக தீமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வும்
3. அழைப்பு பணியின் அவசியம்

போட்டியின் விதிமுறைகள்

கட்டுரை A4 பேப்பரில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

கட்டுரையின் ஆதாரங்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

கட்டுரை சுயமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

புத்தகங்களிலிருந்தோ இணையத்திலிருந்தோ குறிப்புகள் எடுக்கலாம். முழுமையாக நகல் எடுக்கப்பட்டிருந்தால் நிராகரிக்கப்படும்.

கட்டுரையின் முதற்பக்கத்தில் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.

கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.7.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக