வெள்ளி, 25 மார்ச், 2016

சத்தியத்தேடலில் சகோதரருக்கு கிடைத்த இஸ்லாம்

சத்திய தேடலிலிருந்த யுவராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்பதாக அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் உதிக்க செய்திருக்கிறான். அவர் தாமாகவே நமது தஃவா குழு சகோதரர்களை தற்செயலாக அணுக, அவர்கள் நமது இமாமிடத்தில் 22-3-16 அன்று அழைத்து வந்தார்கள். நமது இமாம் அவர்கள் அந்த சகோதரருக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கினார். தான் தேடிய மார்க்கம் இதுதான் என்பதை உணர்ந்த யுவராஜ் உடனடியாக கலிமாவை மொழிந்து முஹம்மது ஃபர்ஹான் என்று தன் பெயரையும் மாற்றியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் அவரது ஈமானை உறுதியாக்கி ஈருலக வெற்றியை தருவானாக ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக