சனி, 30 ஏப்ரல், 2016

திருமண நிகழ்ச்சியில் திரும்பி பார்க்க வைத்த தஃவா ஸ்டால்!

 
முஸ்லிம்கள் யார் யாரிடமெல்லாம் நெருங்கி பழகுகிறார்களோ அவர்கள்தான் இஸ்லாத்தை அறிந்து கொள்வதிலும் குர்ஆன் தமிழாக்கம் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தஃவா களத்தில் இருப்பவர்கள் இதை அதிகமாக உணர முடியும்.

முஸ்லிம்களுடனான நெருக்கமே இஸ்லாத்தை அவர்கள் அறிய உந்துதலாக அமைந்திருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு தஃவா செய்வதும் மார்க்கத்தை புரிய வைப்பதும் மிக எளிது. இப்படிப்பட்ட மக்களை சந்தித்து தஃவா செய்ய ஏற்ற ஓர் அருமையான களம் முஸ்லிம்களின் திருமண நிகழ்வு!

இதை கவனத்தில் கொண்டு நமது தஃவா குழு  நமது பகுதியில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் மணவீட்டாரின் அனுமதி பெற்று தஃவா ஸ்டால் அமைத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (10-4-16) நமது தஃவா குழுவை சார்ந்த சகோதரர் சையது முஹம்மது அவர்களின் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற கண்டோன்மெண்ட் யூஜின் மஹாலில் தஃவா ஸ்டால் அமைக்கப்பட்டு சிறப்பாக அழைப்பு பணி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் முதியோர் உட்பட பல சகோதர சகோதரிகள் இஸ்லாத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்களுக்கு தேவையான பேம்லட்ஸ், புத்தகங்கள், குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. வாய்மொழியாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்லாஹ் அந்த சகோதரத்களுக்கு ஹிதாயத் தருவானாக! நமது முயற்சிகளை பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக