அன்பான சகோதரர்களே!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது பள்ளியில் கடந்த பத்து நாட்களாக கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி முகாம் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அகீதா, மஸாயில், ஒழுக்க நெறிகள், வரலாறுகள், தஜ்வீத், போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.
மாணவ மாணவியரை தொடர்ந்து பள்ளிவாசல் தொடர்பில் இருக்கும் விதமாக அவர்களுக்கு இனி வரும் காலங்களில் அவ்வப்போது சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்று பலரும் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவியர், சிறப்பாக வகுப்பெடுத்த ஆசிரியர்கள் மற்றும் இந்நிகழ்ச்சிக்காக உடலாலும் பொருளாலும் துஆக்களாலும் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஜஸாக்குமுல்லாஹ் கைரன்!
அல்லாஹ் நம் முயற்சிகளை ஏற்று நிறைந்த கூலியை ஈருலகிலும் வழங்குவானாக! ஆமீன்!

15-5-2016 ஞாயிற்றுக்கிழமை அஸருக்கு பிறகு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாணவ மாணவிர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சு, கிராஅத், உரையாடல் போன்ற பலவகையான திறமைகளை மாணவ மாணவியர் அற்புதமாக வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் சிறப்பு விருந்தினர் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
மாணவ மாணவியரை தொடர்ந்து பள்ளிவாசல் தொடர்பில் இருக்கும் விதமாக அவர்களுக்கு இனி வரும் காலங்களில் அவ்வப்போது சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்று பலரும் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவியர், சிறப்பாக வகுப்பெடுத்த ஆசிரியர்கள் மற்றும் இந்நிகழ்ச்சிக்காக உடலாலும் பொருளாலும் துஆக்களாலும் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஜஸாக்குமுல்லாஹ் கைரன்!
அல்லாஹ் நம் முயற்சிகளை ஏற்று நிறைந்த கூலியை ஈருலகிலும் வழங்குவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக