நமது தஃவா குழு சார்பாக பூந்தமல்லியில் சுதந்திர தின சிறப்பு துண்டு பிரசுரம் வழங்கல் மற்றும் தஃவா நடைபெற்றது.
துண்டு பிரத்தின் தகவல்கள் இங்கே தரப்படுகிறது.
இந்திய தேசத்தின் 70வது சுதந்திர தினத்தை எழுச்சியுடன் கொடியேற்றி கொண்டாடி வரும் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
மகிழ்வான இந்நாளில் சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தையும் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம். ஏகாதிபத்திய வெள்ளையர்களை வெளியேற்றும் தீரமிக்க போராட்டத்தில் ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்பது வரலாறு. ஆனால் இன்று வரலாற்றின் ஒரு பக்கம் மட்டுமே காட்டப்பட்டு மற்றொரு பக்கம் திட்டமிட்டு மறக்கப்படுவது வேதனைக்குரியது.
இந்திய சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் முஸ்லிம்களுக்கு தேசப்பற்று என்பதே கிடையாது என்பது போலவும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. எனவேதான் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக செய்த தியாகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில் இந்த துண்டு பிரசுரம் மூலம் சில அரிய செய்திகளை உங்களுக்கு அறியத்தருகிறோம்!
இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றின் முதல் சுதந்திரப் போராக வர்ணிக்கப்படும் சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் - அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் - அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களே!
வெள்ளையர்களை ஆயுத பலத்தால் எதிர்த்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவம் அமைக்க அன்றைய காலத்திலேயே தனது ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துகளை தானமாக கொடுத்தவர் வள்ளல் ஹபீ முஹம்மது!
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தளபதியாக இருந்தவர் ஷாநவாஸ்கான்!
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்கள் காந்திஜிக்கு தென் ஆப்பிரிக்காவில் வேலை கொடுத்து அவருக்கு சுதந்திர வேட்கையை உருவாக்கியவர்கள்!
இவர்களின் "அப்துல்லா" கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்தது. பல கோடி ரூபாய் இழப்பை சுதந்திரத்துக்காக விலை கொடுத்தார்கள் அவர்கள்!
அன்றைய காங்கிரஸ் இந்தியாவிற்கு வெள்ளையர்களிடம் டொமினிக் அந்தஸ்து கேட்டுக்கொண்டிருந்தபோது முதன்முதலாக பூரண சுதந்திரத்தை வலியுறுத்தியவர் ஹஜ்ரத் மொஹானி!
கொடிகாத்த குமரனை தெரிந்தவர்களுக்கு அவரோடு கொடி பிடித்து கடுங்காவல் தண்டனை பெற்ற 7 முஸ்லிம்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை! காரணம் வரலாற்றில் பதியப்படவில்லை!
கப்பலோட்டிய தமிழனாக போற்றப்படும் வ.உ.சிக்கு கப்பல் வாங்க அன்றைக்கே இரண்டு லட்ச ரூபாய் பங்கு கொடுத்ததோடு 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' என்ற அந்த கப்பல் கம்பனியின் செயலாளராகவும் இருந்தவர் ஹாஜி ஏ.ஆர்.பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். வ.உ.சி அதில் துணை செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
மஹாத்மா காந்தி கள்ளுக்கடை மறியல் அறிவித்தபோது அன்று மதுரை கோரிப்பாளையத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 19 பேர். அதில் முஸ்லிம்கள் 10 பேர்!
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர் களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்-யூசுப்கான் (மருதநாயகம்). இவரை வெள்ளையர்கள் தூக்கிலிட்டதோடு அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பகுதிகளில் புதைத்தனர்.
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக ஆங்கிலம் கற்பதே ஹராம் (தடுக்கப்பட்டது) என்று மார்க்க அறிஞர்கள் தடுத்ததன் விளைவு இன்று வரை முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள்!
வெள்ளையர்கள் அணிந்த முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவதைக்கூட தவிர்த்து லுங்கியை அணிந்த்தார்கள் முஸ்லிம்கள்!
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களை எதிராக மக்களை அணி திரட்டும் பிரச்சார தளங்களாக இருந்தன.
முஸ்லிம் பக்கிர்சாக்கள் (யாசகம் பெறுவோர்) கூட விடுதலை வேட்கை ஊட்டும் பாடல்கள் மூலமாக தங்கால் பங்களிப்பை செலுத்தினார்கள்!
இந்திய தேசியக்கொடியின் தற்போதைய வடிவமான நடுவில் அசோக சக்கரத்துடன் கூடிய மூவண்ணக்கொடியை வடிவமைத்தது பக்ருத்தீன் தியாப்ஜி மற்றும் அவர் மனைவி என்ற இஸ்லாமிய தம்பதியினரே!
இவை ஒரு சில தகவல்களே. முஸ்லிம்களின் தியாகங்கள் இன்னும் ஏராளம் உண்டு. மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த்சிங் ரத்தின சுறுக்கமாக இப்படி குறிப்பிடுகிறார்,
"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் பாக்கிஸ்தான் பிரிக்கப்பட்டபோது இங்கிருந்த முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் செல்ல வாய்ப்பு தரப்பட்டது. மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் போன்ற முஸ்லிம்கள் அனைவரும் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்த்ததோடு இந்திய நாட்டிலேயே இருப்பதை விரும்பி இங்கேயே வாழ்ந்து வரும் தேசப்பற்று மிக்கவர்கள்தான் இஸ்லாமியர்கள்! ஆனால் இன்று முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது என்பது போன்ற தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதுதான் வேதனைக்குரியதாகும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக