ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று நமது தஃவா குழு சார்பாக வாராந்திர தெருமுனை டேபிள் தஃவா பூந்தமல்லி டிரங்க் ரோடு பள்ளிவாசல் அருகில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் முஸ்லிமல்லாத பல சகோதரர்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வந்தனர். நமது தஃவா குழுவினர் அழகிய முறையில் அவர்களுக்கு மார்க்க விளக்கமளித்தனர். மேலும் குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கழுத்தில் கொட்டையும் தோளில் காவித்துண்டுமாக பிராமண சமூகத்தை சார்ந்த முருக பக்தர் ஒருவர் நமது ஸ்டாலுக்கு வந்து ஆர்வத்துடன் இஸ்லாம் குறித்து கேட்டறிந்தார். தான் ஒரே இறைவனையே நம்புவதாகவும் முருகரை வழிகாட்டியாக நம்புவதாகவும் கூறிய அவர், நீண்ட நாட்களாக பள்ளிவாசலில் தொழ வேண்டும் என்று ஆசைப்பட்டு அது நிறைவேறவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே அவரை நமது பள்ளிக்கு அழைத்துவந்து நம்முடன் நின்று தொழ வைத்தோம். தொழுது முடித்ததும் அவருக்கு மீண்டும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றார். முன்னோர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடுவது தவறு என்றும் இணை வைப்பதை இறைவன் வெறுக்கிறான் என்றும் விளக்கப்பட்டது. பொறுமையுடன் கேட்டுவிட்டு தொடர்ந்து தான் குர்ஆனையும் புத்தகங்களையும் படிப்பதாக சொல்லி பள்ளியில் தொழுத மனநிறைவுடன் விடைபெற்றார்.

அந்த சகோதரருக்கு அல்லாஹ் ஹிதாயத் தருவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக