அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால் நேற்று (27-11-16) நமது பள்ளியில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நமது தஃவா குழு சகோதரர்களின் அயராத முயற்சியினால் முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலர் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே நிகழ்ச்சிக்காக ஆவலோடு வந்து சேர்ந்தார்கள்.
நிகழ்ச்சியில் மவ்லவி கெளஸ்கான் உமரி அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளான ஏகத்துவம், தூதுத்துவம் மற்றும் மறுமை வாழ்வு குறித்து விளக்கினார்கள். அதனை தொடர்ந்து சகோதரர் அப்துர்ரஹ்மான் (ஜெயரட்சகன்) அவர்கள் தான் இந்து மதத்தின் வள்ளலார் கொள்கையிலிருந்து எப்படி இஸ்லாத்திற்கு வந்தேன் என்பதை பற்றிய தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதரர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பல சகோதரர்கள் பள்ளிவாசலில் தொழுகையில் பங்கேற்க வேண்டுமென்ற தங்கள் நீண்டநாள் ஆசையை நம்முடன் லுஹர் தொழுகையில் பங்கேற்று நிறைவேற்றிக் கொண்டார்கள்.
உணவு சாப்பிட்ட பிறகும் பலர் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியில் பார்வையற்ற சகோதரர் ஒருவர் கலந்து கொண்டு, நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும் தனக்கு குர்ஆன் ஒலி வடிவில் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நமது பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற சகோதரர் மக்ரிப் தொழுகையில் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றதோடு தனக்கு முகம்மது அலி என்ற புதிய பெயரையும் தேர்ந்தெடுத்துக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சிக்காக உடலாலும் பொருளாளும் ஒத்துழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நிறைந்த நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக