மேலும் அல்லாஹ் (உங்களை) அமைதி இல்லத்தை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் : 10:25)
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பெரும் கிருபையால் 11-2-2018 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சியில் என்னை மாற்றிய இஸ்லாம் என்ற தலைப்பில் சகோதரர் சல்மான் (முன்னாள் பெயர் துரைராஜ்) உரையாற்றினார்.
சகோதரர் சல்மான் அவர்கள் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு துரைராஜ் என்ற பெயரில் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையாளராக இருந்தவர். ஊர் நாட்டாமையாகவும் கோவில் பொறுப்புதாரியாகவும் பதவி வகித்தவர்.
ஒரு கட்டத்தில் கடவுளை பற்றியும் இறப்புக்கு பின் என்ன ஆவோம் என்ற தேடலும் அவருக்கு அதிகரிக்க மதங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். முதலில் பைபிளை படித்து அதன் வசனங்கள் ஈர்க்க சிறிது காலம் கிறிஸ்தவராக இருந்துள்ளார். பிறகு இயேசுவின் போதனைக்கும் கிறிஸ்தவர்களின் தற்போதைய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதை அறிந்து பாதிரியார்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் மீண்டும் தேடுதலில் ஈடுபட்டார். பிறகு குர்ஆனை படிக்க ஆரம்பித்துள்ளார். குர்ஆனில் அவர் தேடலுக்கு சரியான விடை கிடைத்தது. இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று கலிமா மொழிந்தார்.
தற்போது தான் ஏற்ற சத்தியத்தை தன் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் எத்தி வைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக தன் ஊரிலேயே ஒரு தஃவா மையத்தையும் கட்டி வருகிறார். அல்லாஹ் அவருடைய முயற்சிகளை பொருந்திக் கொண்டு ஈருலகிலும் நிறந்த நற்கூலி வழங்குவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக