பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தான்
இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
இதுக்குறித்த தகவல்கள் சமூக
தளங்களில் சில நாட்களாக
சுற்றிக்கொண்டிருந்தாலும்,
யுவன் இதுக்குறித்து எதுவும்
தெரிவிக்காததால் வதந்தி என்றே கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூட
செய்திகள் பரவியது.
இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்காணும் கருத்தை தெரிவித்துள்ளார் யுவன்.
"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah"
நான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவில்லை. அந்த செய்தி பொய்யானது. ஆம், நான் இஸ்லாமை பின்பற்றுகின்றேன், அதுக்குறித்து பெருமையும்
படுகின்றேன். புகழ் அனைத்தும்
இறைவனுக்கே உரிதாவதாக... மேலும் அவர் கூறுகையில்,
"My family supports my decision and there is no misunderstanding between me and my dad."
"என்னுடைய முடிவை என் குடும்பம் ஆதரிக்கின்றது. இது தொடர்பாக என் தந்தைக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மாஷா அல்லாஹ்..
அல்லாஹ் அவரை முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் ஸாலிஹான முஸ்லிமாக வாழ வைத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக