வியாழன், 29 மே, 2014

கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி முகாம் 2014

  அல்லாஹ்வின் பேரருளால் நமது பெரியபள்ளி-அஹ்லே ஹதீஸ் சார்பாக மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் 5.5.2014 முதல் 15.5.2014 வரை சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் முடிவில் தேர்வுகள் நடத்தப்பட்டு சிறந்த முறையில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற உடலாலும் பொருளாலும் துஆக்கள் மூலமாகவும்  ஒத்துழைத்த அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக