முஸ்லிமல்லாதோருக்கான வாராந்திர தஃவா 18/5/14 அன்று வெளியிடங்களுக்கு செல்வதற்கு பதிலாக நமது தஃவா குழு உறுப்பினர் சகோதரர் தமீம் அவர்களுக்கு திருமணம் நடந்த மண்டபத்திலேயே நடைபெற்றது. மண்டபத்தின் வரவேற்பறையில் மாற்று மதத்தினரை கவரும் வண்ணம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. திருமணத்திற்கு வந்திருந்த மாற்று மத நண்பர்கள் பலரும் ஆர்வத்தோடு பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். சிலர் அங்கேயே அமர்ந்து இஸ்லாம் பற்றிய விளக்கங்களை பொறுமையாக கேட்டு சென்றனர். நம்முடைய தஃவா பணியில் இது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக