அல்லாஹ்வின் பேரருளால் முஸ்லிமல்லாதோருக்கான இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி 31.8.14 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மவ்லவி அப்துல்க்பர் ஃபிர்தவ்ஸி மற்றும் சகோதரர் அமீருத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இதில் 19 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து மதிய உணவுக்குப் பிறகும் பல சகோதரர்கள் தொடர்ந்து தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். குர்ஆன் கேட்ட சகோதரர்களுக்கு குர்ஆன் வழங்கப்பட்டது.
இம்முறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் கருத்துகளை அறியும் பொருட்டு கருத்து கேட்கும் படிமம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில் பலரும் இந்ந நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் குர்ஆன் படிக்க ஆவலாக உள்ளதாகவும் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம் எனவும் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.
வந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டி ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக்கி வைப்பானாக! ஆமீன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக