திங்கள், 22 டிசம்பர், 2014

வீரியமான தஃவா பணிகள்!

நமது பள்ளிவாசல் தஃவா குழுவின் வாராந்திர தஃவாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது வார்ந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மக்கள் கூடும் பகுதியில் புத்தக ஸ்டால் அமைத்து தஃவா செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (21-12-14) காலை 10 மணியிலிருந்து ஒரு மணி வரை பூந்தமல்லி, கண்டோன்மென்ட், பஜார் தெருவில் தஃவா பணி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வந்தார்கள். அவர்களுக்கு நமது தஃவா குழுவினர் இஸ்லாத்தை பற்றி அழகிய முறையில் எடுத்து சொன்னார்கள். தேவையான சகோதரர்களுக்கு புத்தகங்களும்
குர்ஆனும் வழங்கப்பட்டன. மவ்லவி அக்பர் அலி உமரி அவர்கள் சீரிய முறையிலான வழிகாட்டுதலோடு சிறப்பாக தஃவா பணிகள் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் நமது பணிகளை ஏற்று அந்த சகோதரர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக